தமிழகத்தில் சட்ட மன்றத் தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுக்க உள்ள 234 தொகுதிகளிலும் வெற்றிபெறப் போகும் வேட்பாளர் யார்? என்பது குறித்தும், அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்? என்றும் நக்கீரன் வாரம் இருமுறை வெளியாகும் இதழ் தமிழகம் முழுக்க கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
இதில், திமுக - காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு 133 தொகுதிகளும், அதிமுக கூட்டணிக்கு 75 தொகுதிகளும், பாமகவுக்கு ஒரு தொகுதியும் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் சுமார் 24 தொகுதிகள் இழுபறி நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.