அதிமுக வேட்பாளர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்

செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (04:30 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இணையாக சேர் போட்டு அதிமுக வேட்பாளர்கள் அமர வைக்கப்பட்டனர்.
 

 
புதுச்சேரியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பிரசார மேடையில் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.  மேலும், முதல்வர் ஜெயலலிதா தான் அமர்ந்துள்ள மேடையிலேயே வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
 
இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில்  ஜெயலலிதா மேடைக்கு கீழ், வேட்பாளர்களுக்கு தனிமேடை போடப்பட்டு அதில் உட்காரவைக்கப்பட்டு இருந்தனர்.
 
இது ஒரு நவீன தீண்டாமை என திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்து இருந்தார். இதனையடுத்தே, அதிமுக வேட்பாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு இணையாக மேடையில் அமரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்