6 ஆவது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா

வியாழன், 19 மே 2016 (12:40 IST)
தமிழக முதல்வராக ஜெயலலிதா ஆறாவது முறையாக  பதவியேற்க உள்ளார்.
 

 
  
தமிழகம் முழுவதும் 68 வாக்கு மையங்களில், 9,621 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், தமிழகத்தில் காலை முதல் வாக்குப்பதிவு முடிவுகள் வெளியானது. தற்போது நிலவரப்படி அதிமுக 128 தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றிப் பாதையில் சென்று வருகிறது.
 
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், தற்போதைய முதல்வருமான ஜெயலலிதா, மீண்டும் தமிழக முதல்வராக 6 ஆவது முறையாக பதவியேற்க உள்ளார். இதற்கு தேவையான அனைத்து பணிகளைையும் அதிமுக தரப்பில் செய்துவருவதாக கூறப்படுகிறது. 
 
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
 

வெப்துனியாவைப் படிக்கவும்