'ராஜா ராணி' ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சின்னையா-செம்பா ஜோடி

புதன், 22 ஆகஸ்ட் 2018 (18:17 IST)
முன்பெல்லாம் சினிமாக்களில் நடிக்கும் கதாநாயகிகளையும் கதாநாயகர்களையும் மட்டுமே ரசிகர்கள் கொண்டாடினார்கள். இப்போது சின்னத்திரை சீரியல்  ஜோடிகளையும் மக்கள் விரும்புகிறார்கள்.

இதில் குறிப்பாக தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் பெண்களை வெகுவாக  கவர்ந்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் அந்த சீரியலில் வரும் ரொமான்ஸ் மற்றும் காதல் காட்சிகள் தான்.
 
இதில் செம்பாவாக வரும் ஆல்யா மானசாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு ஜோடியாக சஞ்சீவ் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே குளிர் 100 டிகிரி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
 
தற்போது சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி சினிமாவிலும் நடிக்கவுள்ளனர். இருவரும் என்னை மாற்றும் காதலே என்ற படத்தில் இணையவுள்ளார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்