தனுசு - மாசி மாத பலன்கள் 2022

திங்கள், 14 பிப்ரவரி 2022 (18:24 IST)
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) - கிரகநிலை: ராசியில் செவ், சுக் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.


பலன்:
தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுபட்டு அனைத்து வேலைகளிலும் செயல்பட்டு வெற்றிகளைக் குவிக்கும் தனுசு ராசியினரே இந்த மாதம் எடுத்த முயற்சிகள் கை கூடும். வரவுக்கேற்ற செலவு  ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோ தைரியம் கூடும். செய்யாத தவறுக்கு மற்றவர்களால் குற்றம் சாட்டப்படலாம். எனவே கவனம் தேவை. கண்நோய், பித்தம், வாதம்  சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டு நீங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு  இருக்கும். திடீர் கோபம் உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் கீழ் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம்  உண்டாகலாம். நிதானமாக அவர்களிடம் பேசுவது நன்மை தரும்.  பழைய பாக்கிகளை  வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.  

உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண்  பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர்  வருகை குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால்  செலவு அதிகரிக்கும். சில்லறை சண்டைகள் அக்கம்  பக்கத்தினருடன் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.

பெண்களுக்கு வலிய சென்று உதவுவதன் மூலம் வீண் பழி ஏற்படலாம். கவனம் தேவை. கோபத்தை தவிர்ப்பது நல்லது.  மாணவர்களுக்கு எந்த வேலை செய்தாலும் கவனமாக செய்வது நல்லது. பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன்  கேட்டு படிப்பது நல்லது.  வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை.

அரசியல் துறையினருக்கு நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும்.

மூலம்:
இந்த மாதம்  திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரலாம்.  வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தந்தை மூலம் நன்மை உண்டாகும். எந்தஒரு காரியத்திலும் தெளிவான முடிவினை எடுப்பீர்கள். மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும்.

பூராடம்:
இந்த மாதம்  அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும் படியிருக்கும்.

உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம்  தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனகுழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் மஞ்சள் நிற மலர் சாற்றி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது கடன் பிரச்சனையை தீர்க்கும். செல்வம்  சேரும்.
அதிர்ஷ்டகிழமைகள்: வியாழன், சனி
சந்திராஷ்டம தினங்கள்: பிப் 14, 15, 16; மார் 14
அதிர்ஷ்ட தினங்கள்: மார் 06, 07, 08.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்