துலாம்: ஆவணி மாத ராசி பலன்கள் 2022

வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (16:49 IST)
(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) - கிரகநிலை: ராசியில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சனி(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் சந்திரன்,ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகநிலை உள்ளது.


பலன்:
அனைவரையும் எளிதில் வசப்படுத்தும் வித்தை அறிந்த துலா ராசியினரே, இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு  தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள்.

தொழில், வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில்  இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேல் அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள். நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களை தேடி வரலாம்.

குடும்பத்தில் வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தடைபட்டு வந்த திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றும். கவனம் தேவை.

பெண்களுக்கு:சாதுரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரிய தடைகள் நீங்கும். அரசியலில் மற்றும் பொதுப்பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். முடிந்தவரை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப் பின்பே வெற்றி பெறமுடியும். உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும்.

கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது உத்தமம். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல்கள் உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலைகளால் உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு மனஅமைதி குறையும். உடன் இருப்பவர்களாலே வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்.

மாணவர்களுக்கு: ஆசிரியர்கள், சக மாணவர்கள் உதவிகள் கிடைக்கும். பாடங்களை நன்கு படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.

சித்திரை:
இந்த மாதம் சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும்.

ஸ்வாதி:
இந்த மாதம் பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். சந்திரன் சஞ்சாரத்தால் வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பை உண்டாக்கினாலும், நக்ஷத்ராநாதன் ராகுவின் பலத்தால் பாதிப்பை உண்டாக்காமல் காப்பாற்றி வருவார். இனிப்பும் கசப்பும் மாறிமாறி இன்றைய பலன்கள் இருக்கும்.

விசாகம்:
இந்த மாதம் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் ராஜராஜேஸ்வரியை அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஆக 20, 21; செப் 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: செப் 07, 08.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்