சிம்மம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்

வியாழன், 20 செப்டம்பர் 2018 (14:36 IST)
(மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்). கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசியில்  இருந்த சூரிய பகவான் தனம், வாக்கு, குடும்ப  ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். 

அக்டோபர் 3 ந்தேதி தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் தைரிய, வீர்ய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி  ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு தைரிய, வீர்ய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் சுக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி  தைரிய, வீர்ய ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.
 
பலன்: மனகவலை நீங்கும் படியான சூழ்நிலையை விரும்பும் சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதம் வாக்குவாதங்கள் மற்றும் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை  தவிர்ப்பது நல்லது. பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும் உற்சாகம் உண்டாகும்.
 
குடும்பாதிபதி புதன் பகவான் குரு, சுக்ரனுடன் இணைந்து இருப்பதால் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். கோவில்களுக்குச் சென்று வருவீர்கள். குடும்பத்தில்  தவறு செய்பவர்களுக்கு அதை சுட்டிக்காட்டு சரி செய்வீர்கள். எதிர்பாலினத்தாரால் சிலருக்கு ஆதாயம் கிடைக்கும். தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களால்  நன்மை ஏற்படும். தந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும்.
 
தொழில் ஸ்தானாதிபதி ஆட்சியாக இருப்பதுடன் புதன் மற்றும் குருவுடன்  இணைந்து இருப்பது உங்களுக்கு யோகமான காலமாக இருக்கும். இதை  பயன்படுத்திக் கொள்வதன் மூலம் உங்கள் தொழிலில் ஒரு முக்கிய காலமாக இது இருக்கும்.
 
உத்யோகஸ்தர்கள் விண்ணப்பித்திருந்த கடன் தொகை கிடைக்கப் பெறுவீர்கள். இதனால் உங்களின் நீண்ட நாளைய பிரச்சனைகள் தீரும். பெண்களுக்கு  அவர்களின் சகோதர, சகோதரிகளின் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பொருளாதார பிரச்சனைகள் தீரும். மாணவ மாணவியர் தங்கள் நிலை உயர  அரும்பாடுபட்டு முயற்சி செய்வீர்கள். கல்விச் சுற்றுலா சென்று வருவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
 
கலைத்துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைத்து நல்ல புகழை பெற வேண்டிய கால கட்டம். உடன் இருப்பவர்களை கண் காணிக்க வேண்டி வரும். திறமை  சாலிகள் உங்களைத் தேடிக் கொண்டு வருவார்கள்.
 
அரசியல்வாதிகள் பிறர் பேச்சுகளை நம்பி ஏமார வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். எதிலும் கவனம் தேவை. அலைச்சல் அதிகம் ஏற்படக் கூடும் ஆகையால்  நேரத்திற்கு உணவருந்தி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
 
மகம்: இந்த மாதம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன்  கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.
 
பூரம்: இந்த மாதம் சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலமும் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்கள்  கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம்.
 
உத்திரம் 1ம் பாதம்: இந்த மாதம் புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை தாமதம் அலைச்சல் இருக்கும். நோய்கள் நீங்கி உடல்  ஆரோக்கியம் பெறும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம்  தேவையான உதவிகள் கிடைக்கும்.
 
பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் சிவ பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.
 
சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 25, 26.
 
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 18, 19; அக்டோபர் 15, 16.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்