சிம்மம் - ஐப்பசி மாத ராசி பலன்கள்

வெள்ளி, 16 அக்டோபர் 2020 (15:03 IST)
கிரகநிலை: ராசியில் சுக்ரன்  - தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் புதன்(வ) - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் - சுகஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில்   குரு, சனி - பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) - தொழில் ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. 

பலன்:
 
திட்டமிட்டு செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் சாதகமாகும் என்று நம்பும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம்  நினைத்த காரியங்கள் நடக்கும். நடக்கும்  முறை வேறுபட்டாலும் முடிவு உங்களுக்குச் சாதகமாக இருக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை.
 
குடும்பத்தைப் பொறுத்தவரை கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம்  நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். தூரத்திலிருந்து வரும் உறவினர்கள் குடும்பப் பொறுப்பை உங்களுக்கு உணர்த்துவார்கள்.
 
கலைத்துறையினர் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். சிலர் சொன்ன சொல்லை காப்பாற்ற சிரமப் பட வேண்டியிருக்கும். புதிதாக பழகுபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நன்மையைத் தரும்.
 
அரசியல் துறையினர் அதிக கவனமுடன் செயலாற்ற வேண்டிய கால கட்டம். உங்களுக்கு பக்கபலமாக சிலர் இருப்பினும் அனைவரையும் நம்பி எந்த காரியத்திலும் ஈடுபட வேண்டாம். மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள்.
 
பெண்களுக்கு  எடுத்த முடிவை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். மாணவர்களுக்கு கல்வியில் காணப்பட்ட மெத்தன போக்கு நீங்கி சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். பிடிவாதத்தை விடுவது நன்மை தரும்.
 
மகம்:
 
இந்த மாதம் சக ஊழியர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது.  பணவரத்து அதிகமாகும். எதிர்ப்புகள்  நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்காக  பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும்  அவர்களால் உதவியும் கிடைக்கும்.
 
பூரம்:
 
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன்தரும்.  உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர் பார்த்த பதவி உயர்வும்  கிடைக்கக்கூடும்.
 
உத்திரம் 1ம் பாதம்:
 
இந்த மாதம் குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதை  தடுக்கலாம். பிள்ளைகள் மனம் மகிழும்படி நடந்து கொள்வார்கள். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. 
 
பரிகாரம்: தினமும் சிவன் ஆலயத்திற்குச் சென்று விளக்கேற்றி வழிபட இன்னல்கள் குறையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்
சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 28, 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 22, 23.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்