மேஷம் - ஐப்பசி மாத ராசி பலன்கள்

K.‌P. Vidyadaran

வியாழன், 16 அக்டோபர் 2014 (14:58 IST)
வெளுத்ததெல்லாம் பால் என நினைத்து ஏமாறும் நீங்கள், இளகிய மனசு கொண்டவர்கள். 6-ம் வீட்டில் ராகு நிற்பதால் சமயோஜித புத்தியாலும், மாறுபட்ட அணுகுமுறைகள் மூலமாக பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிதாக அறிமுகமாகுபவர்களால் ஆதாயம் உண்டாகும். கன்னடம், தெலுங்குப் பேசுபவர்கள் மூலமாகவும் பலனடைவீர்கள். சுக்ரன் 20-ந் தேதி முதல் 7-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்வதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும்.

புது வாகனம் சிலர் வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். 7-ம் வீட்டில் சூரியன் நுழைந்திருப்பதால் பிள்ளைகளால் டென்ஷன் இருக்கும். தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். புதன் 6-ல் நிற்பதால் செலவுகளும், எதிர்ப்புகளும் அதிகமாகும்.

கடன் பிரச்னைகளும் அவ்வப்போது தலைத்தூக்கும். கௌரவத்தை இழந்துவிடுவோமோ என்ற அச்சமும் மனதில் இருந்துக் கொண்டேயிருக்கும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் உங்களை சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். புதன் 2-ந் தேதி முதல் 6-ம் வீட்டை விட்டு விலகுவதால் பழைய நண்பர்களுடன் இருந்த கசப்புணர்வுகள் நீங்கி தேடி வந்துப் பேசுவார்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் இருந்த குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கி தீர்க்கமாக, தெளிவாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

வியாபாரத்தில் மாதத்தின் முற்பகுதியில் சின்ன சின்ன நட்டங்களும், ஏமாற்றங்களும் வந்துப் போகும். மையப்பகுதி முதல் லாபம் அதிகரிக்கும். கமிஷன், புரோக்கரேஜ், கெமிக்கல், வகைகளால் லாபம் உண்டாகும். வேற்றுமொழிப் பேசுபவர்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் அலைச்சலும், வேலைச்சுமையும், மனஇறுக்கமும் வந்து நீங்கும். மாதத்தின் பிற்பகுதியில் உத்யோகத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையினரே! முடங்கிக் கிடந்த படைப்புகள் வெளியாகும். சாதுர்யமான பேச்சாலும், அறிவுப்பூர்வமான முடிவுகளாலும் வெற்றி பெறும் மாதமிது.  

வெப்துனியாவைப் படிக்கவும்