துலாம் - ஐப்பசி மாத ராசி பலன்கள்

K.‌P. Vidyadaran

வியாழன், 16 அக்டோபர் 2014 (14:46 IST)
உதிக்கும் போது விதித்ததை உணரும் ஆற்றல் கொண்ட நீங்கள் தடை வந்தப் போதும் தளர மாட்டீர்கள். சுக்ரன் 20-ந் தேதி முதல் உங்கள் ராசிக்குள் ஆட்சிப் பெற்று அமர்வதால் அழகு, இளமைக் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். சோர்வு, களைப்பிலிருந்து விடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். விலகி நின்ற உறவினர், நண்பர்கள் விரும்பி வந்துப் பேசுவார்கள். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

அடிக்கடி தொல்லைக் கொடுத்த வாகனத்தை மாற்றி புது வண்டி வாங்குவீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வி.ஐ.பிகள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு கட்டுவதற்கு அரசு அனுமதிக் கிடைக்கும். வங்கியில் லோன் கிட்டும். ஆனால் ஜென்மச் சனி நடைபெறுவதாலும் சூரியன் உங்கள் ராசிக்குள் நுழைந்திருப்பதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகள், இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து வருந்துவீர்கள்.

2-ந் தேதி முதல் புதன் உங்கள் ராசிக்குள் நுழைவதால் நட்பு வட்டம் விரிவடையும். செவ்வாய் 3-ல் அமர்ந்திருப்பதால் மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இளைய சகோதரர் ஆதரவாகப் பேசுவார். குரு 10-ல் நிற்பதால் சிலர் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்களும் அதிகரிக்கும். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். கன்னிப் பெண்களே! குழப்பங்கள் நீங்கும். நட்பு வட்டத்தில் இருந்து வந்த மோதல்கள் விலகும்.

ரசனைக் கேற்ப வரன் அமையும். உங்கள் ராசிக்கு 6-ல் கேது வலுவாக நிற்பதால் வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். புது முதலீடு செய்ய உதவிகள் கிடைக்கும். பங்குதாரர்களை மாற்றுவீர்கள். பாக்கிகள் வசூலாகும். கமிஷன், பிளாஸ்டிக், உணவு விடுதிகள், எலக்ட்ரானிக்ஸ் வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்யோகத்தில் இந்த மாதம் வேலைச்சுமை குறையும். உத்யோக ஸ்தானத்தில் குரு நிற்பதால் வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற ஒரு அச்சம் இருக்கும். தனிப்பட்ட வகையில் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினரே! முடங்கிக் கிடந்த நீங்கள் முன்னேறுவீர்கள். பொறுமையும், சகிப்புத் தன்மையும், ஆரோக்யத்தில் அக்கறையும் தேவைப்படும் மாதமிது.  

வெப்துனியாவைப் படிக்கவும்