மிதுனம்: ஆனி மாத ராசி பலன்கள் 2021

செவ்வாய், 15 ஜூன் 2021 (16:30 IST)
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை: ராசியில்  சூர்யன், சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய  ஸ்தானத்தில் குரு (அதி. சா)  - அயன சயன போக  ஸ்தானத்தில்  புதன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
நிதானமாகவும் பொறுமையாகவும் முடிவெடுக்கும் மிதுன ராசியினரே இந்த மாதம் பணப் பற்றாக்குறை நீங்கும். சுபச்செலவு உண்டாகும். கொடுத்த வாக்கை
காப்பாற்றுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனம் போன்றவற்றை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். மனோ தைரியம் அதிகரிக்கும்.  சொத்து சம்பந்தபமான விஷயங்களில் அதிக கவனம் தேவை. எந்த விஷயத்திலும் ஆவணங்களை முழுமையாக படித்த பின் கையெழுத்திடுவது நன்மை தரும்.
 
தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். புதிய ஆர்டர்கள்  வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை  செய்து பாராட்டு  பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கக்கூடும்.  இடமாற்றம் உண்டாகலாம்.
 
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் கஷ்டம், சுகம் இரண்டும் ஏற்படலாம். எல்லாரும்  நட்புடன் பழகுவார்கள். 
 
பெண்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். மாணவர்களுக்கு அவசரப்படாமல் நிதானமாக  மனதில் பதியும்படியாக பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். திறமை வெளிப்படும். 
 
கலைத்துறையினருக்கு பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். சனி சஞ்சாரத்தால் வாழ்க்கையில்  பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பு உண்டாகலாம்.
 
அரசியல் துறையினருக்கு நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.
 
மிருகசீரிஷம்:
இந்த மாதம் சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு  வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும்.
 
திருவாதிரை:
இந்த மாதம் பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். ராகு சஞ்சாரத்தால் வாழ்க்கையில் பிடிப்பும்  ஆர்வமும் இல்லாமல் சலிப்பை உண்டாக்கினாலும், ராசிநாதன் பலத்தால் பாதிப்பை உண்டாக்காமல் காப்பாற்றி வருவார். இனிப்பும் கசப்பும் மாறிமாறி இன்றைய  பலன்கள் இருக்கும்.
 
புனர்பூசம்:
இந்த மாதம் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.
 
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க முன்ஜென்ம பாவம் தீரும். குடும்ப கஷ்டம் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன்: 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன்: 20, 21, 22.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்