(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) - சுயநலமற்று சமூக நன்மைக்காக பாடுபடும் குணமுடைய மகர ராசியினரே நீங்கள் உழைப்பதற்கு அஞ்சாதவர். இந்த மாத தொடக்கத்தில் எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. அடுத்தவரை நம்பி எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மையை தரும். ஆன்மிக ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம்.
நீண்ட நாட்களாக நடந்து முடியாமல் இருந்த ஒரு வேலை நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தையின் உடல்நிலையிலும் கவனமாக இருப்பது நல்லது. கடன் விவகாரங்கள் காலதாமதமாகும். வர வேண்டிய பணம் தாமதப்படலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது. ஆனால் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கவனமாக பணி செய்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களையும், வாழ்க்கை துணையையும் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலை நடந்து முடியும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும்.
உத்திராடம் 2, 3, 4:
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும்.
திருவோணம்:
எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக் கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
அவிட்டம் 1, 2:
வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்படலாம்.
பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வெண்ணை சாற்றி வணங்கி வர துணிச்சல் அதிகரிக்கும். காரியதடைகள் நீங்கும்.