மேஷம்: கார்த்திகை மாத ராசி பலன்கள் 2021

வியாழன், 18 நவம்பர் 2021 (17:35 IST)
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) - அடுத்தவர் நலம் காப்பதே லட்சியம் என்பதை கருத்தில் கொண்டு மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் மேஷ ராசியினரே இந்த மாதம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எடுத்த காரியங்களில் தொய்வு ஏற்பட்டாலும் வேகம் பிடிக்கும். 

வீண்மனசஞ்சலம் உண்டாகும். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். அதே நேரத்தில் புதிய வாடிக்கையாளர் பிடிக்க கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  தங்களது பணிகளை  தாமதம் இல்லாமல் முடிக்க பாடுபடுவீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். குழந்தைகளால்  மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் மூலம் அனுகூலம் உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. 
 
நினைத்ததை சாதிக்கும் மனவலிமை உண்டாகும்.   பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். 
 
அர்சியல்வாதிகள் கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானம் உயர வழி பிறக்கும். 
 
அஸ்வினி:
தொழில் வியாபாரம் சிறப்படையும். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.
 
பரணி:
குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள்.  தம்பதிகளுக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகளுக்கு மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும்.
 
கார்த்திகை 1:
எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் காரியதாமதம் உண்டாகலாம். குடும்பத்தில் அமைதி ஏற்படும். லாப நஷ்டங்களையும் அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவீர்கள். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
 
பரிகாரம்: சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி நவகிரகத்தில் செவ்வாயை வழிபட துன்பங்கள் நீங்கும். இன்பங்கள் உண்டாகும். செவ்வாய் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டம தினங்கள்: டிசம் 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்:  நவம் 17, 18, 19, டிசம் 16.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்