கும்பம்: ஆவணி மாத ராசி பலன்கள் 2021

வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (18:06 IST)
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்) - கிரகநிலை: ராசியில்  குரு (வ)   - சுக  ஸ்தானத்தில் ராஹூ -  களத்திர  ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் -  அஷ்டம  ஸ்தானத்தில் சுக்ரன் -  தொழில்  ஸ்தானத்தில் கேது, சந்திரன் -  அயன சயன போக  ஸ்தானத்தில் சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
லாபகரமான சூழ்நிலையை சந்திக்கப் போகும்  கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் வெளியூர் பயணவாய்ப்புகள் உண்டாகலாம். சோம்பலும் சோர்வும் உண்டாகலாம். மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும். ஆனாலும் உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையால் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடைதாமதம் ஏற்படும்.
 
குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் தொல்லைகள்  ஏற்படலாம். தாய் வழி உறவினர்களிடம் வீண் மனஸ்தாபம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகள் மேல் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. 
 
தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்காமல் சற்று மந்தமாக  காணப்படும்.  பணவரத்து தாமதமாகும். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள்  உழைப்பு அதிகமாகும். முயற்சிகள் பயன்தராமல் போகலாம். சாதாரணமாக செய்யக்கூடிய காரியங்களைக் கூட அதிகமாக முயற்சிகள் எடுத்து செய்ய வேண்டியதிருக்கும்.
 
கலைத்துறையினருக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.
 
அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். சந்தோஷமான செய்தி வந்து சேரும்.
 
பெண்கள் யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள்.
 
அவிட்டம்:
இந்த மாதம் அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் வந்துசேரும். புதிய வீடுகட்டும் எண்ணம் நிறைவேறும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்தபடி வருமானம் கிடைக்கும். குடும்பத்தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள்.
 
ஸதயம்:
இந்த மாதம் பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும். பிரிந்து வாழ்ந்த தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். எதிர்பார்த்த அரசு வேலை வந்துசேரும். ஒருசிலர் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பதவி உயர்வும், விரும்பிய இடத்துக்கு மாறுதலும் வந்துசேரும். 
 
பூரட்டாதி:
இந்த மாதம் பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்து, புதிய பங்குதாரர்களையும் பெறுவார்கள். அரசு ஊழியர்களின் வேலைப் பளு குறையும். உங்களுக்கு நன்மைகள் தரும் நாளாக இருக்கும். தொட்ட காரியம் அனைத்திலும் நன்மைகளைப் பெறுவீர்கள். நல்ல வருவாயையும் அடைவீர்கள். 
 
பரிகாரம்:  விநாயகர் அகவல் சொல்லி விநாயகரை வணங்க நோய் நீங்கும். மனகுழப்பம் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: செப் 8, 9
அதிர்ஷ்ட தினங்கள்: செப் 1, 2, 3.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்