அடல்ட்ஸ் ஒன்லி

வியாழன், 24 ஜனவரி 2013 (16:21 IST)
ஒருவர் நிறைய பெண்களை மோகித்தவர். அவருக்கு திருமணம் ஆகிறது. அவர் தன் மனைவியிடம் கூறுகிறார், ஒவ்வொரு முறை உறவு கொள்ளும்போதும் நான் 100ரூபாய் தருவேன் அதனை நீ ஒரு உண்டியலில் போட்டு வைக்கவேண்டும் என்கிறார்.

மனைவி ஏன் என்று கேட்கிறாள், எனது பழக்கம் அப்படி உடனடியாக மாற்றிக் கொள்ள முடியவில்லை எனவே பொறுத்துக்கொள் கொஞ்ச நாளைக்குத்தான் பிறகு உண்டியலை உடைத்து விடலாம் என்கிறார். மனைவியும் ஒப்புக்கொள்கிறாள்

நாட்கள் கழிகிறது உண்டியலில் 100 ரூபாய் தாள்கள் சேரத்தொடங்குகிறது.

ஒருநாள் பண நெருக்கடியில் சிக்கிய கணவன் உண்டியலை உடை என்கிறான். இனிமேல் உண்டியல் தேவையில்லை என்ற மகிழ்ச்சியில் மனைவியும் உண்டியலை உடைக்கிறாள்.

கணவன் அதிர்ந்து போகிறான் என்ன நான் ஒவ்வொரு முறையும் 100ரூபாய்தானே கொடுத்தேன்! அதில் எப்படி 500 ரூபாய் நோட்டுக்கள், 1000 ரூபாய் நோட்டுக்களெல்லாம் வந்தது? என்கிறான்.

அதற்கு மனைவி, "வரவென்னெல்லாம் என்ன உங்களை மாதிரி கஞ்சப்பயலுகளா? என்று குண்டைத் தூக்கிப் போட்டாளே பார்க்கலாம்!

அந்தப் போர்டுல இருக்கிற எழுத்து தெரியலே டாக்டர்!

நர்ஸ் வரட்டும் கண்ணுக்கு மருந்து விடச் சொல்றேன்!

யாரு அங்க தூரக்க ரெட்டை சடை பின்னி, சிகப்பு ரப்பர்பேண்ட் போட்டுக்கிட்டு, வலது பக்க கன்னத்தில சின்னமச்சத்தோட நிக்கிற அந்த நர்ஸா டாக்டர்?
--------------------------

தயாரிப்பாளர் ரேட்டைக் குறைச்சிட்டார்னு நடிகை வயிறு எரிஞ்சி உட்கார்ந்திருக்காங்க?

அப்போ வயிறு எரியரப்பவே தொப்புள்ல ஆம்லெட் போடற சீனை எடுத்திடலாம் சார்!
------------------------------------

அந்த டெய்லருக்கு ரொம்ப கொழுப்பாப்போச்சு!

எதவச்சு அப்படி சொல்ற?

ஜாக்கெட் பின்னாடி ஜன்னல் வைக்கச் சொன்னா...இந்த டைலர்...?

"என்ன பண்ணினான்?

முன்னாடி வெண்டிலேட்டர் வைக்கட்டுமாங்கிறான்!

வேலைக்காரி: என்னை எஜமான் அறைஞ்சிட்டார்மா!

எஜமானி: ஆமா! அவர் கட்டிப்பிடிச்சா வந்து சொல்லமாட்டே...! இதை மட்டும் சொல்ல வந்திட்டே!
-------------------------

கணவன்: ஏண்டி! இனிமே எங்க அம்மா கூட சண்டை போடமாட்டேன்னு அவங்க தலைல அடிச்சு சத்தியம் செஞ்சு கொடுத்தியா?

மனைவி: ஆமாம்! அதுக்கு இப்ப என்ன?

கணவன்: தலைல பயங்கரமா ரத்தம் வழியுது அதோட என் ஆபீசுக்கு வந்து நிக்கறாங்க…"
----------------------------------------

"டாக்டர்: “அஜய் லேபாரட்டரியில ரத்தம், சிறுநீர், டெஸ்ட் எடுத்துக்கிட்டு, டாக்டர் குருமூர்த்தி கிட்டே இ.சி.ஜி. எடுத்துகிட்டு, அப்படியே குமார் எக்ஸ்ரேவிலே எக்ஸ்ரே எடுத்துக்கிட்டு, அம்பி ஸ்கேன் சென்டர்ல முழுசா ஒரு ஸ்கேன் எடுத்துக்கிட்டு...”

பேஷண்ட்: “அப்படியே பணத்தை எடுக்க உங்க ஏ.டி.எம். கார்டையும் பின்நம்பரையும் கொடுத்துட்டீங்கன்னா சௌரியமா இருக்கும் டாக்டர்.

வெப்துனியாவைப் படிக்கவும்