சிபிராஜ் நடித்த ‘வட்டம்’ திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ்!
திங்கள், 25 ஜூலை 2022 (19:05 IST)
சிபிராஜ் நடித்த வட்டம் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ்!
நடிகர் சிபிராஜ் நடித்த வட்டம் திரைப்படம் வரும் 29ஆம் தேதி ஹாட் ஸ்டார் oஒடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது
சிபிராஜ் ஜோடியாக ஆண்ட்ரியா மற்றும் அதுல்யா ரவி பலர் நடித்துள்ள இந்த படத்தை கமலக்கண்ணன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் மதுபான கடை என்ற படத்தை ஏற்கனவே இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
24 மணி நேரத்தில் ஒரு இளைஞரின் வாழ்வில் ஏற்படும் மாற்றம் தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.