’இவனுக்கு தண்ணில கண்டம்' - டீஸர்

செவ்வாய், 17 பிப்ரவரி 2015 (14:37 IST)
முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள 'இவனுக்கு தண்ணில கண்டம்' எனும் புதிய படம் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.
 
முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து உருவாகிறது 'இவனுக்கு தண்ணில கண்டம்' எனும் புதிய படம். மக்களிடையே பிரபலமான வாக்கியத்தை தலைப்பாக்கினால் எளிதில் சென்று சேரும் என்பதற்காக இப்படியொரு தலைப்பை வைத்திருக்கிறார்களாம். சின்னத் திரையில் பிரபலமான ''சின்ன பாப்பா பெரிய பாப்பா ' போன்ற தொடர்களை இயக்கிய சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் முதல் படம் இது.
 
தொலை காட்சி தொகுப்பாளர் தீபக் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் புதுமுகம் நேஹா. இவர்களுடன் பாண்டிய ராஜன், சுப்பு பஞ்சு, மனோ பாலா, எம் எஸ்பாஸ்கர், சென்ட்ராயன்,' நான் கடவுள்' ராஜேந்திரன் மற்றும் சண்டி ஆகியோர் நடிக்கின்றனர்.
 
இந்த படத்தின் டீஸர் கீழே:
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்