‘தெறி’ பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகிவரும் படம் 'மெர்சல்'. சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கும் இந்தப் படத்தை, பெரிய பட்ஜெட்டில் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. சுமார் 80% படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்த நிலையில், ‘மெர்சல்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை 30 கோடி ரூபாய் கொடுத்து ஜீ தொலைக்காட்சி வாங்கி உள்ளது.
இவர்கள் ஏற்கெனவே ரஜினிகாந்த் - அக்ஷய் குமார் நடித்துள்ள ‘2.0’ படத்தின் அனைத்து இந்திய மொழி சாட்டிலைட் உரிமையை 110 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி அடுத்தடுத்து இரண்டு பெரிய நடிகர்களின் படங்களை ஜீ தொலைக்காட்சி வாங்கியுள்ளதால், சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.