ரிவைஸிங் கமிட்டியில் யு சான்று கிடைக்குமா?

திங்கள், 26 ஜனவரி 2015 (19:01 IST)
மெகா பட்ஜெட் படங்கள் அதிக ரிஸ்க் இல்லாமல் போட்ட பணத்தை எடுக்க, 30 சதவீத வரிச்சலுகை அவசியம். என்னை அறிந்தால் படத்துக்கு யுஏ சான்றிதழ்தான் கிடைத்துள்ளது.
ஃபெப்ரவரி 5 என்னை அறிந்தால் வெளியாகவிருக்கும் நிலையில் படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பியுள்ளனர். ரிவைஸிங் கமிட்டி யு சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே 30 சதவீத வரிச்சலுகைக்கு என்னை அறிந்தால் தகுதிபெறும்.
 
அஜீத், அருண்குமார், அனுஷ்கா, த்ரிஷா நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஹாரிஸ் இசையமைத்துள்ளார். பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்