பாகுபலி படத்தின் வெற்றி, சரித்திர படங்களை எடுக்கும் ஆர்வத்தை சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஜெயம்ரவி, ஆர்யா, நடிகை ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கும் பிரம்மாண்ட படமாக தயாராக இருக்கிறது சங்கமித்ரா. பலகோடி பட்ஜெட் உடைய இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார். இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கேன்ஸ் பட விழாவில் நடந்தது.