லியோ: சிகரெட் இடம்பெற்ற காட்சிகளை நீக்குவாரா விஜய்? வலுக்கும் விமர்சனம்
சனி, 17 ஜூன் 2023 (16:03 IST)
சென்னையில் இன்று விஜய் கல்வி விருது விழா நடைபெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியில் அவரது பேச்சு பற்றி தமிழகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ள நிலையில், அவர் நேற்று வெளியிட்ட லியோ பட போஸ்டர் பற்றி விமர்சனம் வலுத்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் விஜய் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் இருந்து முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் சுமார் 1500 பேர் மற்றும் அவர்களுடன் பெற்றோர்கள் என மொத்தம் 6000 பேருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விழாவில் மாணவ, மாணவியர்க்கு கல்வி உதவி தொகை, சான்றிதழ் வழங்கப்பட்டது
இந்த விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் உங்கள் பெற்றோரிடம் சென்று, பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்காதீர்கள் என்று கூறுங்கள். நீங்கள் கூறினால் நடக்கும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் நீங்கள் வாக்களிக்க உள்ளீர்கள் என்று கூறினார்.
மேலும், நீங்கள் தான் நாளைய தலைமுறை வாக்காளர்கள் என்றும் அடுத்து நல்ல தலைவர்களை தேர்ந்தெடுங்கள். வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களை சந்தித்தது தமக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறி அவர் காமராஜர் அம்பேத்கார் பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து படிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், லியோ பட முதல் சிங்கில் வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்த நாளையொட்டி வெளியாகும் என்று நேற்று இயக்குனர் லோகேஷ் அறிவித்திருந்தார். இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்ட போஸ்டரில் விஜய் வாயில் சிகரெட் புகைப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், இன்று கல்வி விழா நிகழ்ச்சி நடத்தி மாணவர்களுக்கு விருது, சான்றிதழ், உதவித் தொகை வழங்கி, ஓட்டிற்குப் பணம் வாங்கக் கூடாது என்று பேசிய விஜய், தியேட்டர்களில் முதல் நாள் காட்சியின்போது, அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவது பற்றிக் குரல் கொடுப்பாரா என்றும், லியோ பட முதல் சிங்கில் நா ரெடி என்ற பட போஸ்டர்களில் இடம்பெற்ற சிகரெட் பற்றிய காட்சிகளை நீக்குவாரா? என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க - கமாண்டர் விஜய் மக்களுக்கு அறிவுரை.
'கட் அவுட், ப்ளக்ஸ் பேனருக்கு நிறைய செலவு பண்ணாதீங்க. கவுண்ட்டர் ரேட்ல மட்டும் டிக்கட் வாங்குங்க... இத எப்ப சொல்லபோறீங்க.. கமாண்டர்' pic.twitter.com/hsVC3T2nVM