கணவருடன் கிரிக்கெட்டில் கால் பதிக்கும் த்ரிஷா?

வியாழன், 29 ஜனவரி 2015 (10:57 IST)
ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்கும் பல அணிகளை சினிமா நடிகர்கள்தான் வாங்கியுள்ளனர். ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி என பட்டியல் நீள்கிறது. இதில் ஷில்பா ஷெட்டி தனது கணவருடன் இணைந்து ஒரு அணியை வாங்கினார். ப்ரீத்தி ஜிந்தா தனது காதலருடன். அந்தக் காதல் முறிந்துபோக ப்ரீத்தி ஜிந்தா இப்போது மைதானத்துக்கு வெளியே. ஷில்பாவும் இப்போது ஆட்டத்தில் இல்லை.
ஊழல் புகாருக்கு ஆளான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீதிமன்ற உத்தரவின்படி விற்பனைக்கு வந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸை வாங்க பல பெரும் தலைகள் ஆர்வம் காட்டுகின்றன.
 
சமீபத்திய செய்தி, நடிகை த்ரிஷாவும், அவரது வருங்கால கணவர் வருண் மணியனும் இணைந்து சூப்பர் கிங்ஸ் அணியை வாங்க திட்டமிட்டுள்ளனர். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் இரு தினங்கள் கடந்த 23 -ஆம் தேதி நடந்தது. மார்ச் மாதத்துக்குப் பிறகே திருமணம். 
 
திருமண தேதி முடிவாகும் முன்பே இப்படியோரு பார்ட்னர்ஷிப் வியாபாரம் குறித்த தகவல். 
 
நடந்தால் நல்லதுதானே.

வெப்துனியாவைப் படிக்கவும்