கொரோனா லாக்டவுனால் திரையரங்குகள் மூடப்பட்டதால் படங்கள் ஓடிடியில் ரிலீஸாக ஆரம்பித்தன. இதில் முதல்படமாக வெளியான பொன்மகள் வந்தாள் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியானது. ஆனால் படுதோல்வி அடைந்தது. அதை போலவே கீர்த்தி சுரேஷின் பெண்குயின் மற்றும் அனுஷ்காவின் சைலன்ஸ் ஆகிய படங்களும் மண்ணைக் கவ்வின. இதுபோல கதாநாயகி மையக் கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் படங்கள் எல்லாம் ஓடிடியில் மிகமோசமான வரவேற்பையே பெற்றன.