தனுஷின் ஒரே தலைவன் யார் தெரியுமா?

சனி, 25 அக்டோபர் 2014 (11:14 IST)
கொஞ்ச நாள் முன்பு தலைவன் மீண்டும் வருகிறார் என்று கவுண்டமணி 49 ஓ படத்தில் நடிப்பது பற்றி குறிப்பிட்டார் தனுஷ். அவர் கவுண்டமணியைதான் தலைவன் என்று அழைப்பது வழக்கம். இந்நிலையில் ரஜினியை தலைவன் என்று அழைத்து ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
 
தீபாவளிக்கு லிங்கா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டனர் அல்லவா. அது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் பின்வருமாறு கமெண்ட் செய்திருக்கிறார்.
 
ஒரு சூரியன், ஒரு சந்திரன் ஒரே தலைவன் சூப்பர் ஸ்டார்தான்.
 
அப்போ கவுண்டமணி? அட, அவரே இப்போ அவுட்ஆஃப் போகஸில்தானே இருக்கார்.

வெப்துனியாவைப் படிக்கவும்