சூப்பர் குட் பிலிம்ஸ் 100-வது படத்தின் ஹீரோ யார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (17:15 IST)
சூப்பர் குட் பிலிம்ஸ் படத் தயாரிப்பு நிறுவனம் விரைவில் தங்களுடைய 100-வது படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இதில் நடிப்பதற்காக நடிகர் விஜய் சம்மதம் தரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக கதைகள் கேட்கும் படலம் தொடங்கப்பட்டுள்ளதாக்வும் கூறப்படுகிறது.
இந்நிறுவனம் விஜய் படமான பூவே உனக்காக, லவ் டூடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, ஜில்லா ஆகிய படங்களை, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார் விஜய். இந்நிலையில் தங்களுடைய 100-வது தயாரிப்பில் நாயகனாக நடிக்க அணுகியுள்ளதாகவும், அதற்கு அவரும் சம்மதம்  தெரிவித்துவிட்டதாகவும், ஜீவா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
 
ஏற்கனவே தேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படத்திலும் நாயகனாக நடித்தவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்