அசோக் செல்வனுக்கு ஜோடி யார்?

வியாழன், 6 ஜூலை 2017 (16:39 IST)
அசோக் செல்வன் நடிக்க உள்ள புதுப்படத்தில், ஜோடியாக நடிக்க 3 ஹீரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.



 
‘பில்லா 2’ மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். ‘பீட்சா 2 : வில்லா’ படத்தின் மூலம் ஹீரோவானவர், ‘தெகிடி’ உள்பட ஒன்றிரண்டு படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் நடித்த படங்கள் பெரிதாகப் போகாததால், கடந்த ஆண்டு இவருக்கு எந்தப் படமுமே ரிலீஸாகவில்லை. தற்போது, ‘கூட்டத்தில் ஒருத்தன்’, ‘நெஞ்சமெல்லாம் காதல்’, ‘மெட்ரோ’ இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். அத்துடன், பிரியதர்ஷன் இயக்கவிருக்கும் ‘சில சமயங்களில்’ படத்திலும் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். ‘ஹிந்தி மீடியம்’ என்ற ஹிந்திப் படத்தின் தமிழ் ரீமேக் இது.

இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஸ்வேதா மற்றும் மஞ்சிமா மோகனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்