காத்திருக்கும் அஜித்… காலாகாலத்துக்குள்ள வேலை நடக்குமா?

புதன், 26 ஜூலை 2017 (18:13 IST)
‘விவேகம்’ படத்தை சென்சாருக்கு அனுப்பிவிட்டு, எப்போது சர்ட்டிஃபிகேட் கிடைக்கும் என அஜித் உள்ளிட்ட படக்குழுவினர்  காத்திருக்கின்றனர்.
 
 
சிவா இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக நடித்துள்ள படம் ‘விவேகம்’. அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால்  நடித்துள்ள இந்தப் படத்தில், விவேக் ஓபராய் மற்றும் அக்‌ஷரா ஹாசன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.தியாகராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.
 
அடுத்த மாதம் 10ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என சொல்லப்பட்டு வந்தது. சிவாவும் படத்தை முடித்து சென்சாருக்கு  அப்ளை செய்துவிட்டார். ஆனால், வரிசைப்படி அப்ளை செய்த படங்களைத்தான் சென்சார் போர்டு மெம்பர்கள் ஒவ்வொன்றாகப்  பார்த்து சான்றிதழ் அளித்து வருகின்றனர். அந்த வகையில், ‘விவேகம்’ படமும் சென்சாருக்காக காத்திருக்கிறது. சென்சார்  சர்ட்டிஃபிகேட் கிடைத்தபிறகே படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்