விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார். எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் எந்த வித பயமும் இன்றி பட படவென அனல் பறக்கும் ரேப்பிட் பஃயர் கேள்விகளை கேட்டு உச்ச நடிகர்களை திக்குமுக்காட செய்திடுவார் டிடி.
சினிமா உலகை பொறுத்தவரையில் திறமைக்கு ஏற்ற அளவுக்கு அழகும் தேவை. அந்த விஷயத்தில் டிடி தன் திறமைக்கு ஏற்றவாறே பார்ப்பதற்கு அழகான முகபாவனையும் கொண்டிருப்பவர். விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் ரசிகர்களின் என்றும் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருவது டிடி தான். சமீபத்தில் இவரது 20 ஆண்டுகால தான். பணியை பாராட்டி 20 இயர்ஸ் ஆப் டிடி என்ற விழாவும் கொண்டாடப்பட்டது.
சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் டிடி அடிக்கடி தனது புகைபடங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் டிடி மேக்கப் போடுவதற்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர்கள் பலரும், டிடி நீங்கள் மேக்கப் இல்லாமலும் அழகாக இருக்கிறீர்கள் என்று கமன்ட் செய்து வர்ணித்து வருகின்றனர்.