மே தினத்தில் இரண்டு விஷயங்களை மிஸ் செய்யும் விவேக்

வெள்ளி, 1 மே 2015 (12:28 IST)
மே ஒன்றான இன்று விவேக் நடித்துள்ள வை ராஜா வை வெளியாகிறது. ஆனால் அவர் படத்தைப் பார்க்க இந்தியாவில் இல்லை, மஸ்கட் சென்றுள்ளார்.
 

 

இந்த பயணம் காரணமாக, வை ராஜா வை படத்தை ரசிகர்களுடன் பார்க்க முடியாமல் போனது என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். அவர் மிஸ் செய்யும் இன்னொன்று அஜீத்தின் பிறந்தநாள்.
 
அஜீத்தின் பிறந்தநாளில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவது விவேக்கின் வழக்கம். இந்தமுறை மஸ்கட்டில் இருப்பதால் போனில் வாழ்த்து கூற இருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்