கெளதம் மேனன் படத்தில் இருந்து விலகிய நடிகர்!!

சனி, 30 டிசம்பர் 2017 (16:14 IST)
கௌதம் மேனன் துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய இரண்டு படங்களின் வேலைகளில் பிஸியாகவுள்ளார். இதனால் இவரது அடுத்த படத்தில் இருந்து நடிகர் ஒருவர் வெளியேறியுள்ளார். 
 
தமிழில் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் மற்றும் தனுஷ் நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களை இயக்கிவரும் கெளதம் மேனன், பல படங்களை தயாரிக்கவும் செய்கிறார். அத்துடன், சில படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடிக்கவும் செய்கிறார். 
 
அவரது தயாரிப்பில் பொன் ஒன்று கண்டேன் என்ற படத்தை தயாரிக்க இருந்தார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் தமன்னா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியானது.
 
இந்த படம் தெலுங்கில் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் இருந்து கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகிவிட்டதாக விஷ்ணு விஷால் டிவிட்டர் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்