அமலாபால் நடித்த அடுத்த படத்திற்கு 'யுஏ' சான்றிதழ்

சனி, 1 செப்டம்பர் 2018 (21:12 IST)
தமிழ் திரையுலகில் வாய்ப்புகளை குவித்து வரும் நடிகைகளில் பட்டியலில் அமலாபால் இருந்து வருகிறார். அவர் தற்போது தமிழ், மற்றும் மலையாள திரையுலகில் பிசியாக உள்ளார். இந்த நிலையில் விஷ்ணுவிஷாலுடன் அவர் நடித்த படம் ஒன்றின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

விஷ்ணுவிஷால், அமலாபால் நடிப்பில் இயக்குனர் ராம்குமார் இயக்கி வரும் படம் 'ராட்சசன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

தில்பாபு மற்றும் ஸ்ரீதர் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ராட்சசன்' படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பிவி சங்கர் ஒளிப்பதிவில் சான்லோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷ்ணுவிஷால் முதல்முறையாக போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்