சுசீந்திரன், சுராஜ், மிஷ்கின் என்று அனுபவ இயக்குனர்களுக்கு தொடர்ச்சியாக கால்ஷீட் தந்த விஷால், பி.எஸ்.மித்ரன் என்ற அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பு தந்துள்ளார்.
விஷாலின் கத்திச்சண்டை முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த மாதம் மிஷ்கின் இயக்கத்தில் அவர் தயாரித்து நடிக்கும் துப்பறிவாளன் தொடங்குகிறது. அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி இரண்டாம் பாகம்.
இதையடுத்து அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு 1960 -இல் சிவாஜி நடித்த இரும்பு திரை படத்தின் பெயரை தேர்வு செய்துள்ளனர்.