அந்த பூதம் வாசலில் இருந்து பெட்ரூமுக்கு வந்துவிட்டது

சனி, 30 ஆகஸ்ட் 2014 (18:47 IST)
நேற்று விஷாலின் பிறந்தநாள். திநகரிலுள்ள நட்சத்திர விடுதியில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். பாண்டிய நாடு படம் நடிகர், தயாரிப்பாளர் என விஷாலுக்கு இருவகையில் வெற்றிப் படமாக அமைந்தது அவரது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளதை பார்க்க முடிந்தது. எடுத்த உடனேயே தடாலடி பேச்சுதான்.
திருட்டு டிவிடி பிரச்சனையில் விஷால்தான் சமீபத்தில் நேரடியாக களத்தில் இறங்கி இரண்டு பேரை போலீசில் பிடித்துக் கொடுத்தார். அதுபற்றி கேட்டதற்கு, திருட்டு டிவிடி பிரச்சனை இப்போது பூதாகரமாகிவிட்டது. இதுவரை வாசலில் இருந்தது இப்போது பெட்ரூம்வரைக்கும் வந்துவிட்டது. இதற்கு திரைத்துறையில் இருப்பவர்கள்தான் போராட வேண்டும். அரசை குறை சொல்லி பயனில்லை என்றார்.
 
இந்த பிறந்தநாளில் அவர் ஒரு கொள்கையை நடைமுறைப் படுத்தயிருப்பதாகவும் கூறினார். இனி, தனக்குப் பிடித்ததை மட்டுமே செய்வாராம். உதாரணமாக அவர்களின் வீட்டில் சில விழாக்களில் கறுப்பு உடை அணிவது பிடிக்காதாம். ஆனால் விஷாலுக்கு கறுப்பு சட்டை போடுவது பிடிக்கும். இந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கிறதாம். இனி மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய விஷயத்தில் தனக்கு விருப்பமானதை மட்டுமே செய்யவிருப்பதாக தெரிவித்தார்.
 
மேலும், ஆர்யா, ஜீவா, கார்த்தியுடன் இணைந்து நடிகர் சங்க நிதி உதவிக்காக ஒரு படம் இலவசமாக நடிப்பதாக சொன்னதையும் உறுதி செய்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்