இந்நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவை பற்றி பேசும் போது அழுதுவிட்டார். ரெமோ திரைப்படம் வெளியாக பெரிதும் போராடியதாகவும், பலரும் படம் வெளிவர விடாமல் தொல்லைகள் கொடுத்ததாகவும் கண்ணீர் மல்க கூறினார்.
தன்னை வேலை செய்ய விடுமாறு வேண்டுகோள் விடுத்ததோடு, நான் எல்லா மேடையிலும் அழுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் உண்மையாக இருக்கிறேன். ஒவ்வொரு வெற்றிக்கும் போராடுகிறேன். யார் ஹிட்டையும் திருடி வரவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த விஷால் “சிவகார்த்திகேயன் மட்டுமல்ல, நானும் ஒரு காலத்தில் கட்டப்பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்டேன். நடிகர் சங்கத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.