பூஜையுடன் தொடங்கியது விமல், அஞ்சலி நடிக்கும் மாப்பிள்ளை சிங்கம்

சனி, 29 நவம்பர் 2014 (11:15 IST)
தூங்கா நகரம், கலகலப்பு படங்களுக்குப் பிறகு விமல், அஞ்சலி இணையும் படம், மாப்பிள்ளை சிங்கம். இதன் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜசேகர் இயக்குகிறார். எழிலின் அசிஸ்டெண்டான இவருக்கு இது முதல் படம். காமெடிக்கு சூரி இருக்கிறார்.
 
காமெடியை பிரதானமாகக் கொண்டு மாப்பிள்ளை சிங்கம் தயாராகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்