ஹாலிவுட்டின் தந்திரங்களுக்கு நடிகர்கள் அடிபணியக் கூடாது – வாய்ப்பை மறுத்த விக்ரம் !

Webdunia
வெள்ளி, 12 ஜூலை 2019 (14:10 IST)
தனக்கு வந்த ஹாலிவுட் வாய்ப்பை கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாததால் மறுத்துவிட்டதாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.

பிராந்திய மொழிகளில் திறமையை வெளிப்படுத்தும் நடிகர்களுக்கு உச்ச பட்சக் கனவாக ஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எழுகிறது. நடிகர்களின் இந்த ஆசையைப் பயன்படுத்திக் கொள்ளும் ஹாலிவுட் அவர்களைத் தங்கள் படங்களில் துண்டு துக்கடா கதாபாத்திரங்களில் நடிக்க வைக்கிறது.

இதன் மூலம் ஹாலிவுட்டின் எல்லை பிராந்திய மொழிப் பேசும் பகுதிகளிலும் விரிவடைகிறது. பாலிவுட்டில் இருந்து சில நடிகர்கள் ஹாலிவுட்டுக்கு சென்று இதுபோல சிறு கதாபாத்திரங்களில் நடித்து ஏமாந்துள்ளனர். அது போல ஒரு ஹாலிவுட் நிறுவனம் தி மேட்ரிக்ஸ் பட நாயகன் கேயானு ரீவ்சுடன் நடிக்க விக்ரமை அனுகியிருக்கிறது. ஆனால் அந்த கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் இல்லாததால் அதை விக்ரம் நிராகரித்துள்ளார்.

இதுகுறித்து ‘ஹாலிவுட்டின் தந்திரங்களுக்கு நடிகர்கள் அடிபணியாமல் இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். விக்ரம் நடிப்பில் அடுத்த வாரம் கடாரம் கொண்டான் படம் ரிலீஸாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்