விக்ரமின் புதிய படம் - மலேசியாவில் தொடங்குகிறது

திங்கள், 22 ஜூன் 2015 (13:48 IST)
விஜய் மில்டனின் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இதையடுத்து அரிமா நம்பி ஆனந்த் சங்கரின் படத்தில் விக்ரம் நடிக்கிறார். விக்ரமுடன் காஜல் அகர்வால் நடிக்க உள்ளார்.

ஆக்ஷன் த்ரில்லராக உருவாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 24 ஆம் தேதி தொடங்குகிறது. அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மலேசியாவில் முதல் ஷெட்யூல்டை படமாக்குகின்றனர்.
 
மர்ம மனிதன் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்