சாமி வரும்போது சாக்ரடீஸ் வெயிட் பண்ணித்தான் ஆகணும் - விக்ரம்

வெள்ளி, 14 அக்டோபர் 2016 (16:11 IST)
இருமுகன் படத்தின் போது, அடுத்து நடிப்பதற்கு கதையும், இயக்கனரும் தேர்வு செய்து வைத்திருந்தார் விக்ரம். பிரம்மன் படத்தை இயக்கிய சாக்ரடீஸ் தான் அந்த அதிர்ஷ்டசாலி. 


அவர் சொன்ன கதை பிடித்துப் போக, இருமுகனுக்குப் பிறகு உங்க படம்தான் என்று உறுதி தந்திருந்தார்.
 
இந்நிலையில், இருமுகன் ஆடியோ வெளியீட்டு விழாவில், சாமி 2 அறிவிப்பை ஹரி வெளியிட உற்சாகமான விக்ரம், சாக்ரடீஸை வெயிட்டிங் லிஸ்டில் வைத்துவிட்டு சாமி 2 படத்துக்கு கால்ஷீட் தந்தார். 
 
விக்ரமுக்கு ஆல்டைம் ஹிட்டாக இருப்பது சாமி படம்தான். அதன் இரண்டாம் பாகத்துக்காக சாக்ரடீஸை காக்க வைத்திருப்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.

வெப்துனியாவைப் படிக்கவும்