வெள்ளைக்காரத்துரைக்கு யு

புதன், 17 டிசம்பர் 2014 (14:01 IST)
கிறிஸ்மஸுக்கு அரை டஜன் படங்கள் திரைக்கு வருகின்றன. அதில் ஒன்று, வெள்ளைக்காரத்துரை.
எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள இந்த ரொமான்டிக் காமெடியில் முதல்முறையாக காமெடி செய்துள்ளார் விக்ரம் பிரபு. உடன் நடித்தவர் சூரி.
 
படப்பிடிப்பு தொடங்கும்முன் சூரியிடம் சென்று, காமெடி நடிப்பு எனக்கு இதுதான் முதல்முறை. நடிக்கும் போது உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம் விக்ரம் பிரபு. அவரது தன்னடக்கத்தை படயூனிட்டே புகழ்கிறது. 
 
கிறிஸ்மஸுக்கு வெளிவரும் இந்தப் படத்துக்கு தணிக்கைக்குழு அனைவரும் பார்க்கத்தகுந்த யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்