விக்ரம் பிரபு தயாரித்து நடிக்கும் படத்தில் நிக்கி கல்ராணி

வியாழன், 16 ஜூன் 2016 (14:09 IST)
நிக்கி கல்ராணி தமிழில் அறிமுகமான டார்லிங் ஹிட். அதிர்ஷ்டக்கார நடிகை என்று முதல் படத்திலேயே முத்திரை கிடைக்க, நிக்கியின் காட்டில் பேய் மழை.


 


லாரன்சுடன் மொட்ட சிவா கெட்ட சிவாவில் நடித்துக் கொண்டிருப்பவர் அடுத்து விக்ரம் பிரபு படத்தில் நடிக்கிறார்.
 
லக்ஷ்மணின் உதவி இயக்குனர் அசோக் இயக்கும் புதிய படத்தில் நிக்கி கல்ராணி, விக்ரம் பிரபு நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை விக்ரம் பிரபு தொடங்கியிருக்கும் அவரது புதிய தயாரிப்பு நிறுவனமான பர்ஸ்ட் ஆர்டிஸ்ட் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
சிவாஜி குடும்பத்திற்கு என்று சிவாஜி புரொடக்ஷன் உள்ளது. அது தவிர விக்ரம் பிரபு பர்ஸ்ட் ஆர்டிஸ்ட் என்ற நிறுவனத்தையும், ராம்குமாரின் மகன் துஷ்யந்த் ஈசான் என்ற நிறுவனத்தையும் தொடங்கியிருப்பது முக்கியமானது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்