ஜுனில் பறக்க ஆரம்பிக்கும் விக்ரமின் கருடா

வியாழன், 11 பிப்ரவரி 2016 (20:34 IST)
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் இரு முகன் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். பிரமாண்டமாக தயாராகும் இந்தப் படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரிக்க, நயன்தாரா, நித்யா மேனன் நாயகிகளாக நடிக்கின்றனர்.


 
 
இதையடுத்து திரு இயக்கத்தில் கருடா என்ற படத்தில் விக்ரம் நடிக்கிறார். காஜல் அகர்வால் நாயகி. இந்தப் படத்தை வரும் ஜுனில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். 
 
பீமா, ஐ என்று அவ்வப்போது ஒரு படத்துக்கு மூன்று வருடங்கள் செலவிடுவதால் வருடத்துக்கு மூன்று படங்களில் நடிக்கும் விக்ரமின் முடிவு காரணமாக ஜுனில், இரு முகன் முடியும் முன்பே கருடாவை பறக்கவிட தீர்மானித்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்