மகனின் முதல் படம் சூப்பர் ஹிட் வெற்றி அடையும் வகையில் பக்கா கதையாக இருக்க வேண்டும் என்பது தான் விக்ரமின் எண்ணம். மேலும் துருவ் நடிக்கும் முதல் படத்தை புதுமுகம் ஒருவர் தான் இயக்க வேண்டும் என்றும் அவர்களிடம் தான் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி இருக்கும் என்றும் விக்ரம் தனது நண்பர்களிடம் கூறி வருகின்றாராம். சமீபத்தில் இருவரும் இணைந்த ஒரு புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் விக்ரமும் துருவ்வும் ஸ்டைலாக நிற்கும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.