இறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய்யின் புலி

வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (16:14 IST)
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புலி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.
 
புலியில் விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ரீதேவி, ஸ்ருதி, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிம்புதேவனின் வழக்கமான ஃபேண்டஸி படம் புலி என்ற பேச்சு உள்ளது. சமீபத்தில் புலியில் விஜய்யின் கெட்டப் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியானது.
 
புலியின் வசனப்பகுதிகளின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இந்த கடைசி ஷெட்யூல்டுடன் வசனப் பகுதிகள் முடிவடைகின்றன. அது முடிந்தால் இரு பாடல் காட்சிகள். படத்தில் அதிக கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால், போஸ்ட் புரொடக்ஷன் முடிந்த பின்பே படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்