காலாவை கைப்பற்றிய விஜய் டிவி

புதன், 25 ஏப்ரல் 2018 (13:21 IST)
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி கைப்பற்றியுள்ளது.
 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது. நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், சாக்‌ஷி அகர்வால், அஞ்சலி பட்டேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 
 
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் போராட்டத்தால், ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸாக வேண்டிய காலா படம் வரும் ஜுன்  7ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
 
இந்நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி கைப்பற்றியுள்ளது. இந்த தகவலை விஜய் டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்