படம் ஹிட்டாகனும்னா அந்த விஷயம் இருக்கணும்… லியோ தயாரிப்பாளர் லலித்துக்கு விஜய் அட்வைஸ்!

Webdunia
புதன், 21 ஜூன் 2023 (07:12 IST)
வாரிசு படத்துக்கு பிறகு தனக்கு மாஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகமாகியுள்ளது. படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருகின்றனர். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மறுதினம் நான் ரெடி என்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. இந்த பாடலை அனிருத் இசையில் விஜய்யே பாடியுள்ளார்.

இந்நிலையில் லியோ படம் பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் லலித், ஒரு படத்தின் சக்ஸஸ் சீக்ரெட் என்ன என்பது பற்றி விஜய் கூறியதைப் பகிர்ந்துள்ளார். இதுபற்றி அவரிடம் விஜய் “ஒரு படத்தில் வில்லன் கதாபாத்திரம் பவர்புல்லாக இருந்தால் அந்த படம் பிளாக்பஸ்டர்” என்று கூறியதாக கூறியுள்ளார். இதனால்தான் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியையும், தற்போது லியோ படத்தில் சஞ்சய் தத்தையும் நடிக்க வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்