''வாரிசு'' பட அப்டேட் பற்றி விஜய்யின் மகன் பதிவிட்ட டுவீட்

செவ்வாய், 18 அக்டோபர் 2022 (18:25 IST)
விஜய்யின் வாரிசு படத்தின் அப்டேட் பற்றிய விஜய்யின் மகன் சஞ்சன் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில், தில்ராஜு தயாரிப்பில் வாரிசு  என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் தற்போது, ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.  இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது அடுத்தக்கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்த நிலையில் வரும் தீபாவளி பண்டியையொட்டி, வாரிசு படத்தின் முதல் சிங்கிலை வெளியிட் படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே வாரிசு பட போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில்,  தீபாவளிக்கு ரசிகர்களை மகிழ்விக்கும் நோக்கில்  வரும் அக்டோபர் 23 ஆம் தேதி மாலை யில் வாரிசு படத்தின் முதல் சிங்கிலான ரஞ்சிதமே என்ற பாடல் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இதுகுறித்து ஓரிரண்டு நாட்களில் படக்குழு அறிவிக்கலாம் என இணையதளத்தில் தகவல்கள் கசியும் நிலையில்,  நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் தன் டுவிட்டர் பக்கத்தில், இந்த வாரம் வாரிசு அப்டேட் வாரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நிச்சயமாக தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு புதிய போஸ்டர்களுடன் வாரிசு பட முதல் சிங்கில் வெளியாகி மகிழ்ச்சியை ஏற்படுத்துவது உறுதியாகியுள்ளது.

Edited by Sinoj

#Varisu update week

வெப்துனியாவைப் படிக்கவும்