100 பேருக்கு ஒரு சவரன் தங்கம்; விஜய் சேதுபதி அறிவிப்பு

செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (17:06 IST)
திரையுலக தொழிலாளர்கள் 100 நபர்களுக்கு தலா ஒரு சவரன் தங்கம் இலவசமாக வழங்கபோவதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.


 

 
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உலகாயுதா என்ற பவுண்டேசனை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த பவுண்டேஷன் மூலம் சினிமா கலைஞர்களுக்கு தங்கம் கொடுக்க திட்டமிட்டு இருந்தார். இதை கேள்விப்பட்ட விஜய் சேதுபதி கலைஞர்களுக்கு கொடுக்கும் தங்கத்தை தான் இலவசமாக அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து விஜய் சேதுபதி கூறியதாவது:-
 
ஜனநாதன் சார் நடத்தி வரும் உலகாயுதா பவுண்டேஷன் மூலம் 100 மூத்த சினிமா கலைஞர்களுக்கு தங்கம் கொடுக்க திட்டமிட்டு இருப்பதாக என்னிடம் தெரிவித்தார். அதை நான் என் செலவில் கொடுக்கிறேன் என அவரிடம் கூறினேன்.
 
எனக்கு எல்லாமே சினிமாதான். எனக்கு எல்லாம் கொடுத்ததும் சினிமாதான். இந்த சினிமாவில் இருக்கிற தொழில்நுட்ப கலைஞர்கள் எனக்கு நிறையவே செய்து இருக்கிறார்கள். 
 
பெப்சியில் உள்ள 23 சங்கங்கள் மூலம் சினிமா தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தலா ஒரு சவரன் தங்கம் கொடுக்கிறோம். மே ஆம் தேதி உழைப்பாளர்கள் தினத்தில் இந்த தங்கம் வழங்கும் விழா நடைபெறுகிறது, என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்