மீண்டும் வசந்தகுமாரனாகும் விஜய் சேதுபதி

வியாழன், 26 பிப்ரவரி 2015 (11:57 IST)
ஸ்டுடியோ 9 தயாரிப்பில் வந்தகுமாரன் என்ற படத்தில் நடிக்க முன்பணம் வாங்கியிருந்தார் விஜய் சேதுபதி. பல காரணங்களால் அவர் அந்தப் படத்தில் நடிக்கவில்லை. முன் பணத்தைத் திருப்பித்தர தயாராக இருந்தார். ஆனால் ஸ்டுடியோ 9 அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, விஜய் சேதுபதி படத்தில் நடிக்காவிடில் நிறுவனத்தை மூட வேண்டிவரும் என கூறியது.
இந்தப் பிரச்சனை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு வந்தபோதும், நடிக்க முடியாது என்ற தனது முடிவில் உறுதியாக இருந்தார் விஜய் சேதுபதி.
 
இந்நிலையில் திடீரென்று மனமிரங்கியுள்ளார் விஜய் சேதுபதி. வசந்தகுமாரனில் நடித்துத் தருவதாக வாக்குறுதி தந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்