இந்நிலையில், ‘கக்கூஸ்’ படத்தின் டிரெய்லரைப் பார்த்த விஜய் சேதுபதி, அவரை அழைத்துப் பாராட்டியுள்ளார். அத்துடன், நீதிமன்றம் உத்தரவிட்டும் எப்படி இதெல்லாம் நடக்கிறது என்றும் விவாதித்துள்ளார். அவர்களுக்கு தானும் உதவ முடிவெடுத்த விஜய் சேதுபதி, ‘கக்கூஸ்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷனுக்காக 30 ஆயிரம் ரூபாயை அளித்துள்ளார். அவரின் இந்த நல்ல உள்ளத்தைக் கண்டு எல்லோரும் வியக்கின்றனர்.