ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம்… ரூல்ஸை மாற்றிய விஜய் சேதுபதி!

வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (16:54 IST)
நடிகர் விஜய் சேதுபதி இப்போது வரிசையாக படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார்.

மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி பல இடங்களில் விஜய்யை விட அதிகமாக ஸ்கோர் செய்தார். இதனால் விஜய் ரசிகர்களே கூட விஜய் சேதுபதியின் புகழ்பாட தொடங்கினர். இந்நிலையில் தமிழைத் தவிர பல மொழிகளில் இருந்தும் விஜய் சேதுபதிக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இதனால் தனது சம்பளம் வாங்கும் முறையை இப்போது மாற்றியுள்ளாராம் விஜய் சேதுபதி. முதலில் ஒரு படத்துக்கு 10 கோடி ரூபாய் வாங்கிய அவர் இப்போது ஒரு நாளைக்கு ஒரு கோடி எனக் கணக்கு வைத்து வாங்குகிறாராம். அதுபோல எந்த படத்துக்கும் 10 நாளுக்கு மேல் தேதிகள் வழங்குவதில்லையாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்